சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் தயாரித்துள்ள ‘பெருசு’ என்ற படம், வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. வைபவ், சுனில், கருணாகரன், சாந்தினி தமிழரசன், பால
சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா, முனீஷ்காந்த், சுவாமிநாதன், தனலட்சுமி, கஜராஜ், தீபா சங்கர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் இளங்கோ ராம் பேசுகையில், ‘ரசிகர்கள் வரவேற்ற ‘ஆண்பாவம்’, ‘இன்று போய் நாளை வா’ படங்களை போல், செம ஜாலியான படமாக ‘பெருசு’ இருக்கும். நிஜ அண்ணன், தம்பி சுனில், வைபவ் இருவரும் படத்திலும் அண்ணன், தம்பியாகவே நடித்துள்ளனர். ‘ஏ’ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ரசிக்கலாம். எந்த இடத்திலும் முகம் சுழிக்க மாட்டீர்கள்’ என்றார்.
கார்த்திக் சுப்பராஜ் பேசும்போது, ‘சமீபத்தில் படம் பார்த்தேன். மிகவும் பிடித்தது. காமெடியுடன் எமோஷனும் சேர்ந்திருக்கிறது. சரியாக எழுதப்பட்டு, சரியாக இயக்கப்பட்டு, சரியாக நடிக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதையும், காட்சிகளும் ரசிகர்கள் எதிர்பாராத கோணங்களில் இருக்கும்’ என்றார்.