சென்னை: ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ், சசி நாகா ஆகியோர், ஸ்டோன்பெஞ்சின் 16வது தயாரிப்பில் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் படத்துக்காக இணைந்துள்ளனர். இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், நிஹாரிகா, சுனில் ரெட்டி, சாந்தினி தமிழரசன், ரமா, கருணாகரன், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, கஜராஜ், சுவாமிநாதன், தீபா சங்கர், விடிவி கணேஷ், முனீஷ்காந்த் நடித்துள்ள இப்படத்துக்கு ‘பெருசு’ என்று பெயரிட்டுள்ளனர்.
ஏற்கனவே ஜி.காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘பெருசு’ என்ற படத்துக்கும், இப்படத்துக்கும் தலைப்பு தவிர எந்த சம்பந்தமும் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது. முதலில் தியேட்டர்களில் வெளியாகும் இப்படம், அதன் பிறகு நெட்பிளிக்சில் வெளியாகிறது.