சென்னை: விஞ்ஞான அடிப் படையில் உருவாகும் படம், ‘எக்ஸ் எக்ஸ் எக்ஸ்’. போலீஸ் அதிகாரியாக நட்டி, மருத்துவராக கே.பாக்யராஜ் மற்றும் சிங்கம்புலி, டீனா, ஆர்த்தி ஷாலினி, மாஸ்டர் இந்திரஜித் நடிக்கின்றனர். சினிமா பிளாட்பார்ம் சார்பில் வி.டி.ரித்தீஷ் குமார் தயாரித்து எழுதி இயக்கி, ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆர்.செல்வா ஒளிப் பதிவு செய்கிறார். பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். கேரளா மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. 6 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மரணம் அடைந்ததால், அவனது தந்தைக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. அவருக்கு மருத்துவர் தீவிரமான சிகிச்சை அளிக்க, போலீஸ் அதிகாரி விசாரிக்கிறார். அன்று வானில் இருந்து விண்கல் பூமியில் விழ, பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
530