சென்னை: ஸென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், ‘தேஜாவு’ படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள ‘தருணம்’ திரைப்படம், ஜனவரி 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகை ஊடகத்தினரை சந்தித்தினர். இதில் நடிகை ஸ்ம்ருதி வெங்கட் பேசியதாவது: அரவிந்தின் ‘தேஜாவு’ படத்தில் நான் நடித்திருந்தேன், அதில் எனக்குச் சின்ன கேரக்டர், ஆனால் அவர் என்னை கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தார். அப்போது அடுத்த படத்தில் நீங்க தான் ஹீரோயின் என்றார். நான் நம்பவில்லை, ஆனால் இந்தப்படத்தில் நான் தான் ஹீரோயின் என்றார் ஆச்சரியமாக இருந்தது. இந்தக்கதை சொன்னார் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகவும் வித்தியாசமான மாடர்ன் கேரக்டர், இதுவரை செய்ததிலிருந்து மாறுபட்ட கேரக்டராக இருக்கும். ராஜா பட்டாசார்ஜி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பைத் தந்துள்ளனர் என்றார். மதன் கார்க்கி, தனஞ்செயன், கீதா கைலாசம், இசையமைப்பாளர் அஸ்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.
38