மும்பை: மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘முகமூடி’ மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த அவர், ‘பீஸ்ட்’ படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்தார். பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படத்தில் நடித்த அவர், இந்தியில் சல்மான் கான் படத்தில் கிஸிகா பாய் கிஸிகி ஜான் படத்தில் நாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என நடித்து வரும் பூஜா ஹெக்டே, இப்போது இந்தியில் ஷாகித் கபூர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரான இதன் விலை ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. அதிக வசதிகள் கொண்ட இந்த காரை பூஜா வாங்கியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பழைய காரை பூஜா விற்றுவிட்டாராம்.