அழகும், இளமையும், நடிப்புத்திறமையும் கொண்ட பூனம் பஜ்வாவை திரையுலகம் புறக்கணித்துவிட்டது என்றாலும், அதுபற்றி அவர் பெரிதாக கவலைப்படவில்லை. சமீபகாலமாக தனது சோஷியல் மீடியாவில் அவர் வெளியிட்டு வரும் கிளாமர் வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதன்மூலம் அவருக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பதால், விளம்பரங்கள் மூலம் அதிக பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது அவர் தாய்லாந்து சென்றிருக்கும் நிலையில், அங்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறது.
தமிழில் ‘சேவல்’ படத்தில் பரத்துக்கு ேஜாடியாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். பல்வேறு மொழிகளில் நடித்தார். எனினும், அவர் எதிர்பார்க்கும் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு, இதன்மூலம் இயக்குனர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறார். என்றாலும், யாரும் அவரை புதுப்படத்தில் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.