ஐதராபாத்: தென்னிந்திய சினிமாவில் தற்போது படுமோசமான அசைவுகளுடன் நடன காட்சிகள் இருப்பதை பலரும் எதிர்த்து வரும் சூழலில் கடந்த மாதம் 10ம் தேதி ரிலீஸான ராபின்ஹுட் தெலுங்கு படத்தில் அமைந்த ஒரு பாடல் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகியது. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், ‘அதிதா சர்ப்ரைஸு’ என்ற பாடலில் நடிகை கெத்திகா சர்மா கிளாமர் ஆட்டம் போட்டிருக்கிறார். அதுவும் அவர் பாவாடையை இழுத்து இழுத்து ஆடியது மிகப்பெரிய சர்ச்சையானது. பல கண்டனங்களுக்கு பின் அக்காட்சி எடிட் செய்யப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை கெத்திகா சர்மா அளித்த பேட்டியில், ‘‘ஒரு நடிகையாக இயக்குனர் சொல்லும் அனைத்தையும் செய்துவிட வேண்டும் என்பது மட்டும் தான் எனக்கு தெரிந்த ஒன்று. கவர்ச்சியாக நடனமாடுவதும் பல ஹீரோயின்கள் பார்க்கும் வேலை தான். அதில், ஏதும் தவறு இருப்பதாக நான் உணரவில்லை. அதனால் தான் அந்த பாடலுக்கு அப்படி ஆடியிருந்தேன். ஆனால் சில விஷயங்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதை ‘அதிதா சர்ப்ரைஸு’ பாடலின் சென்சாருக்குப்பின் தான் புரிந்துக்கொண்டேன். அதன்மூலம் நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தவிர்ப்பேன்’’ என கண் கலங்கியபடி தெரிவித்துள்ளார்.