பிரபாஸ் நடிக்கும் இந்த தி ராஜாசாப் படத்தின் டீஸர் பிரம்மாண்ட விழாவுடன் வெளியாகியுள்ளது.
பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை இணைத்து, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இசை தமன் எஸ் . இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபான்டஸி செட்டில் இந்த விழா நடந்தது. இந்த பிரம்மாண்ட படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இயக்குநர் மாருதி, தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத், இசையமைப்பாளர் தமன் எஸ், மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் படம் குறித்தும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் ஷூட்டிங் ஸ்பாட் குறித்தும் விளக்கமாக பேசினர். டீசர் கலகலப்புடனும் மேலும் இளமை துள்ளலுடன் பிரபாஸ் முதல்முறையாக ஹாரர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:
“தி ராஜாசாப்’ஐ ஆரம்பித்த போது, இந்தியா இதுவரை கண்டிராத வகையில் ஒரு பெரிய படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. இன்று ரசிகர்கள் முன்னிலையில், பிரம்மாண்ட அரங்கில் டீசரை வெளியிட்டதே, அந்த உலகத்தில் நம்மை நேரடியாக எடுத்து செல்வது போலவே உணர்ந்தோம். இது இன்னும் ஆரம்பமே!”
இயக்குநர் மாருதி கூறியது:
“தி ராஜாசாப் என்பது வழக்கமான ஜானரை மீறிய ஒரு தனித்த பயணம். ஹாரர், ஃபான்டஸி, உண்மை, மாயை—இவை அனைத்தையும் இணைக்கும் இந்தப் பயணத்தில், நெஞ்சை பதைக்கும் உணர்வுகளும் உள்ளன. பிரபாஸின் சொந்த ஊரில் இந்த டீசரை வெளியிடுவதே, ஒரு மறக்க முடியாத அனுபவம்.”
தமன் எஸ் வழங்கிய பின்னணி இசை சமூக ஊடகங்களில் வலையைக் கிளப்பி, டீசரை வைரலாக்கியுள்ளது. ரசிகர்கள் தற்போது ஏராளமான மீம்கள், ஃபேன் எடிட் வீடியோக்கள், கதை ஊகங்கள் போன்றவற்றால் இணையத்தை கலக்கி வருகின்றனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள இந்த பான் இந்தியத் திரைப்படம் 2025 டிசம்பர் 5 அன்று, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.