Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழுக்கு திரும்பினார் பிரியங்கா திரிவேதி

சென்னை: தமிழில் விஜயகாந்துடன் ‘ராஜ்ஜியம்’, விக்ரமுடன் ‘காதல் சடுகுடு’, அஜித் குமாருடன் ‘ராஜா’, அருண் விஜய்யுடன் ‘ஜனனம்’ போன்ற படங்களில் நடித்தவர், பிரியங்கா திரிவேதி. பிறகு கன்னட நடிகர் உபேந்திராவை காதல் திருமணம் செய்து ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் தாயானார். தற்போது அதிரடி ஆக்‌ஷன் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘உக்ராவதாரம்’. வரும் நவம்பர் 1ம் தேதி ரிலீசாகும் இதை பிரியங்கா உபேந்திரா வழங்க, எஸ்.ஜி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜி.சதீஷ் தயாரித்துள்ளார். குருமூர்த்தி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

நந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணா பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் வசனத்தை கின்னாழ் ராஜ் எழுதியுள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பிரியங்கா உபேந்திரா பேசியதாவது: அஜித் சாரின் ‘ராஜா’, விக்ரம் சாருடன் ‘காதல் சடுகுடு’ உள்ளிட்ட 5 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளேன். என்னை இப்போதும் தமிழ் ரசிகர்கள் நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பேட்டியில், ‘நீங்கள் தயிர் சாதம்தானே’ என்று என்னிடம் கேட்டனர். அந்தளவுக்கு என் படத்தின் காட்சிகள் தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.