சென்னை: பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இத்துடன் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குனர் கோபிசந்த் மலினேனி, ரவி தேஜா சேர்ந்து பணியாற்ற இருக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா மோகன் தேர்வாகியிருக்கிறார். கோபிசந்த் மலினேனியுடன் ரவிதேஜா இணையும் நான்காவது படமிது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் ராஷ்மிகா. ஆனால் சம்பள பிரச்னையால் ராஷ்மிகா இதில் நடிக்கவில்லை. அதன் பிறகே இதில் நடிக்க பிரியங்கா மோகன் தேர்வாகியுள்ளார்.