மும்பை: தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் வினோத நோயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். முன்பை விட உடல் மெலிந்து நோயாளிபோல் காட்சி தருகிறார் கரண் ஜோஹர். சமீபத்தில் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, கரண் ஜோஹருக்கு என்ன ஆனது? என கேள்விகள் எழுப்பினர். இது பற்றி கரண் ஜோஹர் கூறியது: எனக்கு Body Dysmorphia (பாடி டிஸ்மோர்ஃபியா) என்கிற பிரச்னை இருக்கிறது. நம் உடம்பு நமக்கே பிடிக்காது. ஆடையில்லாமல் உடம்பை பார்க்க சுத்தமாக பிடிக்காது. என்னால் என்னையே கண்ணாடியில் பார்க்க முடியாது. இது அரிய வகை நோய். நீரிழிவு நோய்க்காக Mounjaro ஊசி போட்டீங்களா, Ozempic ஊசி போட்டீங்களா என மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்கிறார்கள். இது போன்ற கேள்விகளால் நான் டயர்டாகிவிட்டேன். அவர்களுக்கு என்னை பற்றிய உண்மை தெரியவில்லை. பல ஆண்டுகளாக எனக்கு இதய வீக்கம் தொடர்பான பிரச்னையும் இருக்கிறது. இந்நிலையில் தைராய்டு பாதிப்பு இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இந்த நோய்களுக்காக நான் கடைபிடிக்காத டயட்டே இல்லை. எல்லா ஒர்க்அவுட்டும் செய்து பார்த்துவிட்டேன். ஆயிரம் விதமான டயட்டுகள், பல நூறு வகையான ஒர்க்அவுட்டும் செய்து பார்த்துவிட்டேன். இவ்வாறு கரண் ஜோஹர் கூறியுள்ளார்.
353