Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ப்ராமிஸ் படத்துக்கு டப்பிங் பேசிவிட்டு எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர்

சென்னை: சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் ‘ப்ராமிஸ்’. கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் .சரவண தீபன் இசையமைத்துள்ளார். பாடல்களைப் பாலா எழுதியுள்ளார். ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

நாயகியாக நதியா சோமு நடித்துள்ளார். மேலும் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். என். நாகராஜ் பெருமையுடன் வழங்க அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், சங்கமித்ரன் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளன. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சத்தியத்தின் சோதனையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருப்பார்கள்.

அப்படிப் படத்தில் கதாநாயகன் எதிர் கொள்ளும் தருணங்கள் படம் பார்ப்பவர்களை சுவாரஸ்ய ஆட்டத்திற்குள் இறங்கி ரசிக்க வைக்கும். படத்திற்கு பின்னணிக் குரல் கொடுக்க வந்த தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் படத்தின் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டுப் பாராட்டி இருக்கிறார்.அவரது பாராட்டால் படக்குழு உற்சாகமடைந்திருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் வெளியிடும் இப்படம், ஜூன் 26ம் தேதி திரைக்கு வருகிறது.