லண்டன்: லண்டனில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நடிகர் ராம் சரணுக்கு மெழுச் சிலை வைத்திருக்கிறார்கள். ராம் சரணின் செல்ல நாயான ரைமுடன் அவர் போஸ் கொடுத்ததை மெழுகுச் சிலையாக வடித்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்த சிலையை திறந்து வைக்க ராம் சரண் தன் மனைவி உபாசனா, மகள் க்ளின் காரா, அப்பா சிரஞ்சீவி, அம்மா சுரேகாவுடன் லண்டனுக்கு சென்றார். சிலையை திறந்து வைத்து தன் செல்லநாய் ரைமுடன் போஸ் கொடுத்தார் ராம் சரண். மெழுகுச் சிலை அருகே ராம் சரண் போஸ் கொடுக்க அவரின் மகள் க்ளின் காரா, தத்தித் தத்தி நடந்து மேடைக்கு வந்தார். நிஜ ராம் சரணை விட்டுவிட்டு அப்பாவின் சிலையை நோக்கிச் சென்றார். அதை பார்த்த ராம் சரணோ மகளின் கையை பிடித்து, ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்றார். அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து சிரித்தனர். சிலை திறப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் உபாசனா. ராம் சரணின் மெழுகுச் சிலையுடன் தான் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். சிரஞ்சீவியும், அவரது மனைவியும் தங்கள் மகனின் மெழுகுச் சிலையுடன் பெருமையாக போஸ் கொடுத்திருக்கிறார்கள்.
329