Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரோட்டர்டாம் பட விழாவில் இன்று ராமின் பறந்து போ

சென்னை: ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள முழுநீள காமெடி படம், ‘பறந்து போ’. இது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் இன்ற திரையிடப்படுகிறது. ராமுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்துள்ள இப்படத்தில், முக்கிய வேடங்களில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மாஸ்டர் மிதுல் ரியான் நடித்துள்ளனர். பிடிவாத குணம் கொண்ட பள்ளி மாணவனும், அதிக வசதி இல்லாத அவனது தந்தையும், கவலைகள் நிறைந்த உலகத்தில் இருந்து விடுபட, ஜாலியாக ஒரு ரோட் ட்ரிப் மேற்கொள்கின்றனர்.

அவர்களின் பயணம்தான் கதை. படத்தைப் பற்றி இயக்குனர் ராம் கூறியதாவது: நான் எழுதி இயக்கிய ‘பறந்து போ’ படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து வழங்குகிறது. செவன் சீஸ், செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படம் உருவாகியுள்ளது. பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார். பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்.