ஐதராபாத்: ராம்சரணின் ‘கேம்சேஞ்சர்’ பட அப்டேட் எதுவுமே இல்லாத காரணத்தினால் ராம்சரண் ரசிகர்கள் படக்குழுவினரை கடுமையாக சாடத் தொடங்கினார்கள். இணையத்தில் படக்குழுவினருக்கு எதிரான ட்ரெண்டை உருவாக்கி கருத்துகளைக் கொட்டினார்கள். இது தொடர்பாக இசையமைப்பாளர் தமன், “எதிர்மறையான கருத்துகளை பரப்புவது அல்லது தொடங்குவதால் என்ன பயன்? இது திரைப்படத்தை மட்டுமே காயப்படுத்தும்.
எங்களின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் கடந்த 2 ஆண்டுகளாக படத்தின் தகவல்களை உங்களுக்கு பிரம்மாண்டமாக அளிக்க பாதுகாத்து வருகிறது. ரசிகர்கள் அதற்கு மதிப்பளித்து, தயவுகூர்ந்து நேர்மறையான கருத்துகளை இதயத்திலிருந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.