ஐதராபாத்: புரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் பொதினேனி நடிப்பில் வெளியான ’ஐஸ்மார்ட்’ என்ற படத்தின் 2ம் பாகமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ என்ற படத்தின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மணிசர்மா இசை அமைத்திருக்கிறார். இப்போது 2வது சிங்கிளான ‘மார் முன்தா சோட் சிந்தா’ வெளியாகியுள்ளது. ஐதராபாத் ஸ்லாங்கில் காசர்லா ஷ்யாம் எழுதியுள்ளார். மணிசர்மாவின் நாட்டுப்புற இசை கூடுதல் பலத்தை அளித்துள்ளது. ராகுல் சிப்லிகஞ்ச், தனுஞ்சன் சீபனா, கீர்த்தனா ஷர்மா பாடியிருக்கின்றனர். ராம் பொதினேனி, காவ்யா தாப்பர் ஆடியுள்ளனர். புரி கனெக்ட்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சஞ்சய் தத், ஆலி, கெட்அப் னு நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் பான் இந்தியா படமான இதற்கு சாம் கே நாயுடு, கியானி கியானெலி ஒளிப்பதிவு செய்துள்ளனர். புரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார்.