சென்னை: ரம்யா நம்பீசன் கூறியதாவது: சினிமா உலகில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்படி நடக்கும் போது அதை தைரியமாக நடிகைகள் எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப் பற்றி பேச வேண்டும். அதுமட்டுமின்றி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பவர்களிடம் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்து கொண்டு ‘முடியாது’ என்று மறுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
‘சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கும் இதுபோன்ற தொல்லைகள் இருந்தது. அப்போதே நான் போல்டாக செயல்பட்டதால், யாரும் என்னை நெருங்கவும் முடியவில்லை. இந்த விஷயத்தில் மற்ற நடிகைகளும் குறிப்பாக புதுமுகங்கள் வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த அட்ஜஸ்ட்மென்ட் கும்பலை சினிமாவிலிருந்து விரட்டலாம்’ என ரம்யா நம்பீசன் கூறினார்.