ஐதராபாத்: இந்திய படவுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவை அவரது ரசிகர்கள், ‘நேஷனல் கிரஷ்’ என்று செல்லமாக அழைக்கின்றனர். பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவர், திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து அதிக பணம் சம்பாதிக்கிறார். இந்தியில் வெளியான ‘அனிமல்’, பான் இந்தியா படமாக ரிலீசான ‘புஷ்பா 2: தி ரூல்’,
இந்தியில் திரைக்கு வந்த ‘சாவ்வா’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக அதிகமான சந்தோஷத்தில் இருந்த அவர், இந்தியில் கோலிவுட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கானுடன் நடித்த ‘சிக்கந்தர்’ என்ற படம் தோல்வி அடைந்த நிலையில் மிகவும் வருத்தப்பட்டார்.
தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘குபேரா’ என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கும், அவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இருவரும் தீவிரமாக காதலித்து வருவதால், இந்த ஆண்டில் அவர்களின் திருமணத்தை நடத்த இருவீட்டு பெற்றோர்களும்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சிஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, தனது முதல் காதலை பற்றி சொன்னார். ‘உங்களுக்கு முதல் காதல் எப்போது வந்தது?’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டபோது பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, ‘என் முதல் காதல் பல வருடங்களுக்கு முன்பு நான் ஒரு பள்ளியில் படிக்கும்போது வந்தது. அந்த பையனே முதன்முதலாக எனக்கு லவ் லெட்டர் தந்தான்’ என்றார். ஆனால், அந்த லவ் லெட்ட ருக்கு அவர் என்ன பதில் சொன்னார் என்பது பற்றி தெரிவிக்கவில்லை.