Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சொந்த ஊரை மாற்றிய ராஷ்மிகா: கன்னட ரசிகர்கள் கொதிப்பு

மும்பை: ‘சாவா’ இந்தி பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா, தான் ஐதராபாத்வாசி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா பேசுகையில், `நான் ஐதராபாத் நகரைச் சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நினைக்கிறேன்’ என்று கூறிய வீடியோ கிளிப் தற்போது வைரலாகி வருகிறது. இதில், தான் ஐதராபாத்தைச் சேர்ந்தவள் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், கன்னட நெட்டிசன்களும் ரசிகர்களும் ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விராஜ்பேட்டை, குடகு மாவட்டம் ஐதராபாத்தில் உள்ளதா? சொந்த ஊரை மறந்துவிட்டாயா? வெற்றி கிடைத்தால் ஊரையே மாற்றிவிடுவார்களா? ராஷ்மிகா எங்கு பிறந்தார் என்பது கூடத் தெரியவில்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னை டிரோல் செய்வது சரியே என்று ஒருமையில் நெட்டிசன்கள் பேசி, கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஏற்கனவே கன்னட மக்களை இழிவாகப் பேசியதற்காக பெரும் சர்ச்சை எழுந்தது. ராஷ்மிகாவும் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார். அதனாலேயே அவர் நான் ஐதராபாத்தை சேர்ந்தவள் என கூறியிருக்கலாம் எனத் தெரிகிறது.