மும்பை: முத்தக் காட்சியில் நடிக்க ரூ.30 லட்சம் கூடுதலாக ராஷ்மிகா சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ‘சுல்தான்’, ‘வாரிசு’ படங்களில் நடித்த ராஷ்மிகா, தெலுங்கில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து பான் இந்தியன் ஸ்டாராக மாறினார். இந்தியில் அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ படத்தில் நடித்திருந்த அவர், இப்போது ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ படத்தில் நடித்துள் ளார். இப்படத்தில் நடிக்க ராஷ்மிகாவுக்கு ரூ.2 கோடி சம்பளமாகப் பேசப்பட்டது.
ஆனால், அதைவிட கூடுதலாக அவர் ரூ.30 லட்சம் பெற்றது தொடர்பாகவே இப்போது தகவல் பரவி வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் ரன்பீர் கபூருடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் ராஷ்மிகா நடிக்க வேண்டியிருந்ததாம். இதுபற்றி ராஷ்மிகாவிடம் சொன்னபோது, ரூ.10 லட்சம் கூடுதலாக கொடுத்தால், அந்தக் காட்சியில் நடிப்பதாக கூறியிருக்கிறார். படத்தில் 3 இடங்களில் அதுபோல் காட்சிகள் வருவதால், ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று ராஷ்மிகா கேட்டாராம். அதற்கு தயாரிப்பு தரப்பு ஒப்புதல் தந்த பிறகே நடிக்க சம்மதித்தாராம்.