சென்னை: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நோய்க்காக சிகிச்சை பெற அவர் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அதற்கு முன்பாக நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறார். புதிய படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் எதுவும் ஒதுக்கவில்லை. புதிய கதைகள் கேட்க சில மாதங்களுக்கு முன் நேரம் ஒதுக்கி இருந்தார். ஆனால், அந்த கமிட்மென்ட்களை அவர் ரத்து செய்துவிட்டார். இதனால் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை எடுத்து திரும்பியதும் அவர் சினிமாவுக்கு முழுக்கு போடுவார் என்றும் சாமியார் ஆகப்போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால்தான் சமந்தா, கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வேலூரில் உள்ள தங்க கோவிலுக்கு சென்ற புகைப்படம் வெளியானது. நேற்று முன்தினம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இந்த நிலையில் தற்போது கோவையில் உள்ள ஈஷா பவுண்டேஷன் சென்றுள்ள சமந்தா, அங்கு சக பெண் பக்தர்களுடன் உட்கார்ந்து கண்ணை மூடி தியானம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கழுத்தில் பூமாலை, நெற்றியில் குங்குமம் வைத்து பெண் சாமியார் போல் அவர் காட்சியளிக்கிறார். கடைசியாக கவர்ச்சி நடிகை தனுஸ்ரீ தத்தா சினிமாவுக்கு முழுக்கு போட்டு சாமியார் ஆனார். அதுபோல் சமந்தா மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.