சென்னை: மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, ஹுமா குரேஷி ஆகியோர் நடிப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஹீமா குரேஷி இப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். முன்னதாக ஹீமா குரேஷி, அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் நடித்திருந்த நிலையில் கால்ஷீட் பிரச்னையில் அஜித் படத்தில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல மார்க்கெட்டினை வைத்துள்ள ரெஜினா கசாண்ட்ராவை அஜித்துடன் நடிக்க வைக்க கேட்டுள்ளனர். இதையடுத்து ரெஜினா உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதால், ரெஜினா அஜித்துக்கு ஜோடி கிடையாதாம். அவருக்கு ஆக்ஷன் காட்சிகளில் முக்கியத்துவம் இருக்குமாம்.