சென்னை: மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் அடுத்த பாகமான ‘தி மார்வெல்ஸ்’ திரைப்படம் நவம்பர் 10ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இதில் ‘கேப்டன் மார்வெல்’ கரோல் டான்வர்ஸ், ‘மிஸ் மார்வெல்’ கமலா கான் மற்றும் மோனிகா ராம்பியூ ஆகிய மூன்று பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. உலகை காக்கப் போராடும் ஹீரோக்களின் அதிரடி, ஆக்ஷன் கதை கொண்ட படமாக இது உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிக்கும் ப்ரி லார்சன் கூறுகையில், ‘இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயமாக கருதுகிறேன். மிகவும் ஆற்றல் மிக்க கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்’ என்றார்.
155