சென்னை: இளையராஜா இசையில் உருவாகியுள்ள 1417வது படம், ‘நினைவெல்லாம் நீயடா’. லேகா தியேட்டர்ஸ் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் ஏற்படும் முதல் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், பழனிபாரதி எழுதி கார்த்திக் பாடிய ‘மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்’ என்ற முதல் பாடலை கவுதம் வாசுதேவ் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். ரோஹித், யுவலட்சுமி நடித்துள்ள இப்பாடல் காட்சிக்கு தீனா நடனப் பயிற்சி அளிக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரஜன், மனீஷா யாதவ், சினாமிகா உள்பட பலர் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.