சென்னை: வைபவ், அதுல்யா ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அதுல்யா ரவியின் தோற்றம் வித்தியாசமாக இருந்ததால், அவர் தன்னுடைய முகத்துக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து பேசிய அதுல்யா ரவி, ‘இதுபோன்ற வதந்திகளுக்கு பின்னால் எந்தவொரு உண்மையும் இல்லை. நான் இதுவரை அறுவை சிகிச்சையோ அல்லது பிளாஸ்டிக் சர்ஜரியோ செய்துகொள்ளவில்லை.
இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்கள் எதற்காக, யாரால் பரப்பப்படுகிறது என்று தெரியவில்லை. இனிமேல் யாரும் ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். அழகை அதிகரிக்க ஆபரேஷன் செய்ததாக வெளியான தகவல்களால் அதுல்யா ரவி அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது.