அரியவகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் கடுமையாக போராடி வருவதாக, பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கூறியுள்ளார். இது அவரது தீவிர ரசிகர்களை அதிர வைத்துள்ளது. 59 வயதான சல்மான்கான் கடந்த 1988ல் சினிமாவில் அறிமுகமானார். அவர் நடித்த பல படங்கள் பல்வேறு தரப்பு ரசிகர்களை கவர்ந்தது. அவரது கட்டுமஸ்தான உடல்வாகு, மேனரிசங்கள், பாடிலாங்குவேஜ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. 59 வயதான அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். அடிக்கடி பல்வேறு கருத்துகளை சொல்லியோ அல்லது தனது நடவடிக்கைகளின் மூலமாகவோ சர்ச்சையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார். கடந்த 2011ல் அவர் தனது முகத்தில் நரம்பு ரீதியான பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார்.
அதற்காக அப்போது ஒரு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு மேலும் சில பாதிப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அரியவகை பாதிப்பு அவரது மூளையின் ரத்த நாளம் மற்றும் ஏவிஎம் நரம்பு மண்டலத்தில் இருப்பதாக கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான்கானிடம், அவர் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்று கேட்கப்பட்டது. அப்போது தனது உடல்நிலை குறித்து அவர் பேசியபோது இந்த விஷயம் தெரியவந்துள்ளது. இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.