சென்னை: இயக்குனருடன் சமந்தா நெருக்கமான ‘போஸ்’ கொடுத்து காதலை உறுதிப்படுத்தியுள்ளார். நாக சைதன்யாவை சமந்தா பிரிந்த பிறகு, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப்சீரிஸில் அவர் நடித்தார். அப்போது அந்த வெப்சீரிஸ் இயக்குனரான ராஜ் நிடிமொரு உடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜ் இயக்கிய ‘சிட்டாடல்’ வெப்சீரிஸிலும் சமந்தா நடித்தார். இதில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதை அவர்கள் மீடியாவிடம் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் நேற்று விமானம் மூலம் ஐதராபாத்துக்கு வந்த சமந்தாவின் பக்கத்து சீட்டில் ராஜ் அமர்ந்திருந்தார். அப்போது ராஜ் மீது சாய்ந்தபடி நெருக்கமாக போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்துள்ளார் சமந்தா. இதன் மூலம் காதல் உறுதியானதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ராஜ் நிடிமொரு ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக பாலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
131