சென்னை: தென்னிந்திய படவுலகை தொடர்ந்து பாலிவுட்டிலும் பிசியாக நடிக்கும் சமந்தா, தற்போது ‘ரக்த் ப்ரஹ்மண்ட்: தி ப்ளடி கிங்டம்’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் சார்பில் ‘சுபம்’ என்ற தெலுங்கு படத்தை தயாரித்து, கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதிக நஷ்டம் ஏற்படவில்லை. அடுத்து ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து ஹீரோயினாக நடித்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு கவர்ச்சியில் அதிக தாராளம் காட்டுகிறார்.
இது மற்ற ஹீரோயின்களை அதிகமாக பொறாமைப்பட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா அணிந்திருந்த ஆடை குறித்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. வலை போன்ற அமைப்பு கொண்ட ஆடையை அவர் அணிந்து இருந்தார். விருது நிகழ்ச்சி முடிந்ததும் தனியாக போட்டோஷூட் நடத்தினார். அந்த போட்ேடாக்களை பார்த்த நெட்டிசன்கள் சிலர், ‘சமீபகாலமாக சமந்தா அதிக கவர்ச்சி காட்டுகிறாரே. திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்று? போட்டோஷூட் எல்லாம் ஓவராக இருக்கிறதே’ என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.