ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடி சேரும் ‘குஷி’ என்ற படத்தின் 2வது சிங்கிள் ‘ஆராத்யா’ வெளியானது. படத்தில் திருமணத்துக்குப் பிறகு ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையிலான மாயாஜால காதல் பாடலாக இது அமைந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் சித்ஸ்ரீ ராம், சின்மயி இணைந்து பாடியுள்ளனர். ‘ஹிருதயம்’ ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் சிவ நிர்வானா தெலுங்கு பாடல்களை எழுத, மதன் கார்க்கி தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார். இந்திப் பதிப்பில் ஜூபின் நவுடியல், பாலக் முச்சல் இணைந்து பாடியுள்ளனர்.
கன்னடப் பதிப்பில் ஹரிச்சரண் சேஷாத்திரி, சின்மயி சேர்ந்து பாடியுள்ளனர். மலையாளப் பதிப்பில் கே.எஸ்.ஹரிசங்கர், ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘குஷி’ படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் தேவரகொண்டா, சமந்தா, முரளி சர்மா, ஜெயராம், சச்சின் கடேகர், சரண்யா பிரதீப், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.