சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்திருந்த ‘ரங்கூன்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இந்தி நடிகை சனா மக்ஃபுல். கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கூறுகையில், ‘வெகுநாட்களாக கல்லீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறேன். எனக்கு கல்லீரல் சிரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல் இந்த நோய் குணமடைய நான் காத்திருக்கிறேன். தற்போது என் நிலைமை மோசமடைந்து வருகிறது என்றாலும் கூட, மனதளவில் நான் வலுவாக இருப்பதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறேன்’ என்றார். ஆனால், அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று, டாக்டர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.