லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி (54), லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலுள்ள தனது வீட்டின் குளியல் ெதாட்டியில் திடீரென்று இறந்த நிலையில் கிடந் தார். தகவலறிந்த போலீசார், அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘வெந்நீர் குளியல் தொட்டியில் இறந்த நிலையில் மேத்யூ பெர்ரியின் சடலம் மீட்கப்பட்டது. அங்கு போதைப்பொருள் இல்லை. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது’ என்றனர். மேத்யூ பெர்ரியின் திடீர் மறைவுக்கு ஹாலிவுட் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வில்லியம்ஸ் டவுனில் பிறந்த அவர், இளம் வயதிலேயே ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு டி.வி தொடர்களில் நடித்தார். 1994ல் தொடங்கிய ‘பிரண்ட்ஸ்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய திருப்பு
முனையாக அமைந்தது. இன்றுவரைக்கும் அவரை ‘நையாண்டி கிங்’ என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். போதைப்பழக்கம் மற்றும் மனச்சோர்வு காரணமாக அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.