பெங்களூரு: ‘உலக அளவில் கன்னட படவுலகம் இந்தியாவின் முகமாக மாறிவிட்டது’ என்று தமன்னா கூறினார். பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது: பெங்களூரு ஒரு அழகான நகரம். அதற்கு அதிக ஆற்றல் இருக்கிறது. இங்கு வருவதை நான் பெரிதும் விரும்புகிறேன். நான் மிகவும் சாதாரணமானவள். அதுதான் எனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசும்போது அதிக உற்சாகம் அளிக்கிறது. இன்று கன்னட படவுலகம் அனைத்து தடைகளையும் உடைத்துள்ளது.
உலக அளவில் கன்னட படவுலகம் இந்தியாவின் முகமாக மாறிவிட்டது. இந்தியாவில் நாம் பார்க்கும் சில பெரிய பட்ஜெட் படங்கள் இங்கிருந்தே வருகின்றன. கன்னட படங்கள் மேற்கத்திய நாடுகளை காப்பியடிக்கவில்லை என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கிருந்து வரும் கதைகள் பெரும்பாலும் உள்ளூர் இயல்பு கொண்டவை. இங்குள்ள மக்களின் இதயங்களுக்கு நெருக்கமானவை. அதுவே அவர்களை வெற்றிபெற வைக்கிறது. விரைவில் கன்னடத்தில் ஒரு படத்தில் நடிப்பேன் என்று நம்புகிறேன்.