சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து, வரும் டிசம்பர் 5ம்தேதி உலகளவில் வெளியாகவுள்ளது ‘புஷ்பா 2’. இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வரும் நிலையில் சென்னையில் வைல்ட் ஃபயர் ஈவெண்ட் என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா கலந்து கொண்டார். மேலும் புஷ்பா 2வில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரீலீலாவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடியும் போது படக்குழுவினர் அனைவரும் இணைந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து வந்தனர். அந்த சமயத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களை அங்கு வந்த பவுன்சர்கள் தள்ளிவிட்டனர். அதில் ஒரு ரசிகரின் கன்னத்தில் ஒரு பவுன்சர் பளார் விட்டு துரத்தியிருக்கிறார். மேலும் சிலருக்கு அடி, உதை விழுந்துள்ளது. தற்போது அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
62