சென்னை: முன்னணி பாடகி ஜொனிடா காந்தி (35), பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவரது எல்லா பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளன. உலக அளவில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் ஜொனிடா காந்தி கூறியிருப்பதாவது:
ஒருமுறை இன்ஸ்டாகிராமில் எனது நண்பர்களுடைய பல்வேறு பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ஸ்டோரியை பார்த்தேன். அதில் ஒரு ஆண் தனது அந்தரங்க பகுதியை வெளிப்படையாக பகிர்ந்து, அதன் பின்னணியில் என் போட்டோவை வைத்திருந்தார். இது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதுபோன்ற நபர்களை உடனடியாக முடக்கிவிடுவேன். இத்தகைய சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை என்பதால், யார் மீதும் நான் வழக்கு தொடரவில்லை. இந்த செயல்கள் அனைத்துமே பாலியல் சீண்டல்கள்தான். இதுபோல் பலர் எனக்கு தொல்லை கொடுத்தனர்.