புதுடெல்லி: 2024ம் ஆண்டு அதிக வருமான வரி செலுத்தியவர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்திலும், நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்த நிதியாண்டில் பிரபலங்கள் செலுத்திய வருமான வரி குறித்து பார்ச்சூன் இந்தியா ஆய்வு செய்து பட்டியல் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்கள் பலர் இடம்பிடிதுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த நடிகர்களில் விஜய் மட்டுமே 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ரூ.92 கோடி வரி செலுத்தி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் உள்ளார். 2வதாக நடிகர் விஜய் ரூ.80 கோடியும் 3வதாக சல்மான் கான் ரூ.75 கோடியும் 4வதாக அமிதாப்பச்சன் ரூ.71 கோடியும் 5வதாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ரூ.66 கோடியும் செலுத்தியுள்ளனர்.
6வதாக அஜய் தேவ்கன் ரூ.42 கோடியும் 7வதாக கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ரூ.38 கோடியும் செலுத்தியுள்ளனர். மற்றவர்கள் விவரம்: ரன்பீர் கபூர் ரூ.36 கோடி. ஹிரித்திக் ரோஷன், சச்சின் டெண்டுல்கர் ரூ.28 கோடி. கபில் சர்மா ரூ.26 கோடி. சவுரவ் கங்குலி ரூ.23 கோடி. கரீனா கபூர் ரூ.20 கோடி. ஷாகீத் கபூர் ரூ.14 கோடி. கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.13 கோடி. நடிகை கியாரா அத்வானி ரூ.12 கோடி. மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தலா ரூ.14 கோடி. நடிகர் பங்கஜ் திரிபாதி மற்றும் நடிகை கேத்ரினா கைப் தலா ரூ.11 கோடி.