பாங்காக்: ஜாக்கிசான் நடித்த ‘குங்ஃபூ யோகா’ படத்தின் தொடர்ச்சியாக ஸ்டான்லி டாங் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘எ லெஜண்ட்’ படத்தில் ஜாக்கி அகழ்வாராய்ச்சி நிபுணர் மற்றும் இளம் வீரர் என இரண்டு மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், ஜாக்கி நடிக்கும் இளம் வீரர் கதாபாத்திரத்தை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் ஜாக்கியுடன் லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தை இயக்கியுள்ள ஸ்டான்லி டாங், ஏற்கனவே ஜாக்கிசான் நடிப்பில் போலீஸ் ஸ்டோரி 3 படத்தை 1992ம் ஆண்டில் இயக்கினார். இப்படம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வசூல் சாதனைகளை புரிந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.