Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சர்மிளா மந்த்ரே காதல் திருமணம் தமிழ் தயாரிப்பாளரை மணந்தார்

பெங்களூரு: தமிழில் விநய் ராய் நடித்த ‘மிரட்​டல்’ என்ற படத்​தில் ஹீரோயினாக நடித்​தவர், கன்னட நடிகை சர்​மிளா மந்த்​ரே. தவிர, தெலுங்கு மற்றும் கன்​னடத்​தில் நடித்​துள்ள அவர், தற்போது தமிழில் ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக தமிழில் விமல் நடித்த ‘இவனுக்கு எங்​கேயோ மச்​சம் இருக்​கு’, விமலுடன் ஸ்ரேயா நடித்த ‘சண்​டக்காரி’, ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்த ‘நானும் சிங்​கிள்​ தான்’ ஆகிய படங்களை தயாரித்​துள்​ளார்.

அவருக்​கும், தமிழ் திரைப்பட தயாரிப்​பாளர் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்​தரத்​துக்​கும் கடந்த மாதம் பெங்களூருவில் திருமண நிச்​சய​தார்த்​தம் நடந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்மிளா மந்த்ரே, சுதன் சுந்தரம் திருமணம் ராஜஸ்தான் அரண்மனையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர்.

திருமண போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சர்மிளா மந்த்ரே, ‘இப்போது நான் மிஸஸ் சுந்தரமாகிவிட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடித்த ‘மகா​ராஜா’, ஹரீஷ் கல் யாண் நடித்த ‘பார்க்​கிங்’ உள்பட சில படங்​களை தயாரித்​துள்​ள சுதன் சுந்தரம், தற்போது ‘மிஸ்​டர் பாரத்’, ‘பென்ஸ்’ ஆகிய படங்​களை தயாரிக்கிறார். ‘பார்க்கிங்’, ‘மகாராஜா’ ஆகிய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.