சென்னை: நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிக்கும் படம் ‘சார்’. கல்வியை மையப்படுத்தி ஒரு கிராமத்தில் நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் ஆசிரியராக விமல் நடிக்கிறார். ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட படங்களை வழங்கிய வெற்றிமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது.
ஏற்கனவே கன்னிமாடம் படத்தை இயக்கியிருந்த போஸ் வெங்கட், இயக்கும் 2வது படம் இது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் தயாரிக்கிறார். விஜய்யின் ‘கோட்’ படத்தை தொடர்ந்து இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஜித் சாரங் எடிட்டிங், இசைய சித்து குமார், கலை இயக்கம் பாரதி. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.