சென்னை: நடிகை சமந்தா, பாம்பு எண்ணெய் விற்பவர் ஆகிவிட்டார் போலிருக்கிறது என டாக்டர் ஒருவர் தாக்கி பதிவு போட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா கடந்த ஆண்டு, ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் மூலம் சிகிச்சை பெறுவதை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, பல விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த சிகிச்சை முறையின் ஆபத்துகளைப் பற்றி சில மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர், குறிப்பாக தி லிவர் டாக் என்று அறியப்பட்ட டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ், இது ஆபத்தானது என்றும், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் என்றும் சமந்தா என்ன முட்டாளா? என்றும் காட்டமாக கூறினார்.
இந்நிலையில் என்எம்என் மருந்துகளை உட்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என சமந்தா இன்ஸ்டாவில் கூறியிருந்தார். இதையடுத்து அதே டாக்டரான சிரியாக், ‘‘இந்த மருந்து உட்கொள்வதற்கு உகந்தது கிடையாது என சில முக்கிய ஆன்லைன் நிறுவனங்களே விற்பனையை நிறுத்திவிட்டன. சீனாவில் இந்த மருத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாம்பு எண்ணெய் விற்பனையாளர் போல் சமந்தாவின் செயல்கள் இருக்கின்றன’’ என தெரிவித்துள்ளார். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.