ஐதராபாத்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பான் இந்தியா படம், ‘புஷ்பா 2’. இதன் முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி யில் சமந்தா கவர்ச்சி நடனமாடினார். அதுபோல், 2வது பாகத்திலும் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. இதில் நடனமாட தெலுங்கு முன்னணி நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அவரது தேதிகளும், சம்பளமும் சரிப்பட்டு வந்ததால் படக்குழு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அல்லு அர்ஜூன், ஸ்ரீலீலா பாடல் காட்சி ஐதராபாத்தில் படமாக்கப்படுகிறது. இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.
57