Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கார்த்திக் ஆர்யனுடன் ஸ்ரீலீலா காதலா?

மும்பை: பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன், நடிகை ஸ்ரீலீலா காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய ஸ்ரீலீலா, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். இப்போது பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஸ்ரீலீலா சமீபத்தில் கார்த்திக் ஆர்யனின் வீட்டில் நடந்த ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டார், அதில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். இதைவைத்து கார்த்திக் மற்றும் ஸ்ரீலீலாவின் உறவைப் பற்றி சினிமா வட்டாரத்தில் ஊகிக்கிறார்கள்.

ஸ்ரீலீலா கார்த்திக் ஆர்யனை விட 11 வயது இளையவர். கார்த்திக் ஆர்யனுக்கு 34 வயது ஆகிறது, ஸ்ரீலீலாவுக்கு இன்னும் 23 வயதுதான் ஆகிறது. கார்த்திக் ஆர்யனின் தாய் மாலா திவாரி தனது வருங்கால மருமகளைப் பற்றி கூறுகையில், ‘‘குடும்பத்தின் தேவை என்னவென்றால், அவள் ஒரு நல்ல டாக்டராக இருக்க வேண்டும்’’ என்றார். இதன்மூலம், மாலா தனது மகன் கார்த்திக்கின் ஸ்ரீலீலாவுடனான உறவை உறுதிப்படுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. காரணம், ஸ்ரீலீலா, எம்பிபிஎஸ் முடித்தவர்.