சென்னை: அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் டி.எஸ்.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் “ராம் அப்துல்லா ஆண்டனி” தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் பிகில் படத்தில் வெறித்தனம் பாடல் பாடியதோடு, விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து, பூவையார் பிரபலமானார். 2 பள்ளி மாணவர்களாக அஜய் அர்னால்ட், அர்ஜூன் நடிக்கிறார்கள். மேலும், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு – எல்.கே.விஜய் இசை – டி.ஆர்.கிருஷ்ண சேத்தன்.
95