Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

உதட்டால் கேலி கிண்டலுக்கு ஆளானேன்: பூமிகா வருத்தம்

சென்னை: உதட்டால் கேலி, கிண்டலுக்கு ஆளானேன் என கூறியிருக்கிறார் பூமிகா. ‘ரோஜாக்கூட்டம்’, ‘பத்ரி’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. ‘டோனி’ இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டிலும் பிரபலமானார். இப்போது தமிழ், தெலுங்கில் ஹீரோயினாகவும் அக்கா வேடங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் ‘பிரதர்’ படத்தில் ஜெயம் ரவியின் அக்கா வேடத்தில் நடித்திருந்தார். அவர் கூறியது:

நடிக்க வந்த புதிதில் எனது உதட்டை காரணம் காட்டி ஆடிஷன்களில் நிராகரித்தார்கள். இதனால் ஆரம்பத்தில் பல பட வாய்ப்புகளை இழந்தேன். உதடுகள் பெரிதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டேன். சிறு வயது முதலே இதற்காக நான் உருவ கேலியும் செய்யப்பட்டுள்ளேன். ஆனால் அதற்காக நான் பெரிதாக கவலைப்பட்டதில்லை. பிறகு எனது நடிப்பு திறமையால் வாய்ப்புகள் கிடைத்தது. எந்த உதடு மைனசாக கருதப்பட்டதோ, அதே உதடுகள்தான் எனது தோற்றத்துக்கு அழகு என மாறியது. தொடர்ந்து பல படங்களில் நடித்தேன். மனம் தளராமல் இருந்தால் இதுபோல் சாதிக்க முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம்தான் என்கிறார் பூமிகா.