கடந்த 2009ல் விமல் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க’ என்ற படத்தில், ஜீவா என்ற கேரக்டரில் நடித்திருந்த ராம், சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றார். பிறகு ‘கற்றது தமிழ்’, ‘கோலி சோடா’ உள்பட சில படங்களில் நடித்தார். 29 வயதான அவர், கார்பன் கேப்சர் டெக்னாலஜி நிறுவனம் நடத்துகிறார். இந்நிலையில், திடீரென்று அவர் தனது காதலி நிகில் பிரியாவை திருமணம் செய்துகொண்டார். ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தனது நிறுவனத்தை நடத்தி வரும் ராம், அப்போது நிகில் பிரியாவுக்கு காதல் வலை வீசியிருக்கிறார். அது வெற்றிபெற்று இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் படித்துள்ள நிகில் பிரியா, தனது கணவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். தவிர, தன்னைவிட 4 வயது அதிகம் கொண்ட டி.வி சீரியல் நடிகை பிரீத்தி குமாரை ‘பசங்க’ கிஷோர் காதல் திருமணம் செய்திருக்கிறார். இத்தம்பதிக்கு கடந்த ஜூன் 29ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. ‘கோலி சோடா’, ‘நெடுஞ்சாலை’, ‘சகா’, ‘ஹவுஸ் ஓனர்’ உள்பட சில படங்களில் நடித்துள்ள ‘பசங்க’ கிஷோர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஜூன் 29ம் தேதி ‘பசங்க’ படத்தின் இரு நடிகர்கள் வெளியிட்ட சந்தோஷமான செய்தியை அறிந்த நெட்டிசன்களும், ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.