Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுந்தரா டிராவல்ஸ் 2வில் பஸ் கதை

சென்னை: முரளி, வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் சுந்தரா டிராவல்ஸ். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு ‘சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட்’ என்று தலைப்பிட்டுள்ளனர். கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் இவர்களுடன் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இளம் ஜோடிகளாக விக்னேஷ் - அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு - செல்வா.ஆர். இசை - ஹரிஹரன். இயக்கம் - கருப்பு தங்கம். இணை தயாரிப்பு - எஸ். சிவமுருகன். படம் பற்றி இயக்குனர் கறுப்பு தங்கம் கூறியதாவது: இந்த கதையில் பஸ் தான் ஹீரோ அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்சை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்றார் போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.