சென்னை: ஏகே. பிரேவ்மேன் பிக்சர்ஸ் வழங்கும் ‘பீனிக்ஸ்’ திரைப்படம் மூலம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆக்ஷன் கதைக்களத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் ‘பீனிக்ஸ்’ திரைப்படம் வருகிற ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு வேல்ராஜ் மற்றும் படத்தொகுப்பு பிரவீன் கே.எல். என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளனர்.
77