சென்னை: கார்த்தி நடிப்பில் திரைக்கு வந்துள்ள 27வது படம், ‘மெய்யழகன்’. இப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்த டொவினோ தாமஸ், சூர்யா மற்றும் கார்த்தியை நேரில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து போட்டோவுடன் கூடிய பதிவு வெளியிட்டுள்ள அவர், ‘நான் நடிகராக வேண்டும் என்று நினைத்த காலத்தில் இருந்தே இவ்விருவரையும் பார்த்து அதிக ஊக்கம் பெற்றேன். தற்போது இவர்களுக்கு நடுவில் நிற்கிறேன்.
எனது திரையுலகப் பயணத்தில் இவர்களுடைய பங்கு முக்கியமானது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தமிழில் தனுஷ் நடித்த ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்துள்ள டொவினோ தாமஸ், சமீபத்தில் வெளியான ‘ஏஆர்எம்’ என்ற பான் இந்தியா படத்தின் மூலம் தனது 50வது படத்தை நிறைவு செய்துள்ளார்.