சென்னை: சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் படைப்பாக உருவாகிறது ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக திரிஷா மற்றும் இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாஸிகா, அனகா மாயா ரவி, ஷிவதா மற்றும் சுப்ரீத் ரெட்டி நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்க, பல மகத்தான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை கையாள்கிறார்.
கலைவாணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். எழுதி, இயக்குகிறார் ஆர்.ஜே. பாலாஜி. கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை ஒரு சில நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. ஒரே நேரத்தில் இறுதி கட்ட வேலைகளையும் படக்குழு கவனித்து வருகிறது.