Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுசி கணேசன் இயக்கத்தில் ஒரண்ட

சென்னை: ‘ஒரண்ட’ என்ற தலைப்பால் மட்டுமே தனது அடுத்த படத்தை உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடையே பேசு பொருளாக மாற்றியுள்ளார், இயக்குனர் சுசி கணேசன். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 85 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.‘விரும்புகிறேன்’ என்ற படத்தின் மூலமாக, பழமையான ஒரு தமிழ்ச்சொல்லை மறக்க முடியாத தலைப்பாக மாற்றினார்.

அப்படத்தின் விளம்பரத்துக்காக, சென்னை அண்ணா சாலையில் தீயணைப்பு குழாய்களால் பிணைக்கப்பட்ட நிலையில் ஹீரோ, ஹீரோயின் இடம்பெற்ற பிரமாண்டமான விளம்பரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு ‘5 ஸ்டார்’, ‘திருட்டு பயலே’, ‘கந்தசாமி’ ஆகிய படங்களின் தலைப்பு மூலமாக ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிய சுசி கணேசன், இப்போது ‘ஒரண்ட’ என்ற தலைப்பின் மூலமாக மீண்டும் அந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் அடுத்தடுத்து வெளியிடப்படுகிறது.