சென்னை: இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமான இசை வீடியோவாக உருவாகி வருகிறது ‘கண்ணோரமே’. யோகி பாபு மற்றும் பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘லோக்கல் சரக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சுவாமிநாதன் ராஜேஷ், ’கண்ணால மயக்குரியே’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பு பெற்றதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து 2023ம் ஆண்டு வெளியான ‘கடைசி தோட்டா’ படத்தின் மூலம் வித்தியாசமான இசையை கொடுத்து கவனம் ஈர்த்தார். அப்படத்தில் இடம்பெற்ற ‘அய்யாயோ..’ மற்றும் ‘நானும் அவளும்…’ பாடல்கள் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.